Some cataract patients, having already undergone a successful cataract surgery, subsequently face a new problem. This new problem is posterior capsule opacification, also called secondary cataract. At Aravind, engineers created a new product innovation to solve this new problem. In 2004, Aurolab first started producing Truedge lenses.

Truedge lenses are another type of intraocular lens. Intraocular lenses provide high quality vision after cataract surgery; therefore, they fulfill Dr. G. Venkataswamy’s admonition to go “well beyond the sophistication of the best technology, to the humble demonstration of courtesy and compassion to each patient.” However,Truedge lenses are unique because they prevent a potential patient health care issue after the surgeon has already corrected the original issue(i.e.,cataract). Secondary cataract occurs when there is movement or growth of cells in the posterior capsule surface. The intraocular lens rests against this same surface. Therefore, the multinational company Alcon, came up with a foldable square-edge lens with a uniquely sticky material. This material makes the intraocular lens surface stick closely to the posterior capsule surface, therefore there can be no movement or growth of cells.

The design team at Aurolab figured out that the design plays an equally critical role in preventing the movement or growth of cells behind the IOL optic post surgery. For their new design, they decided to use the acrylic material (poly-methyl-methyacrylate or PMMA) that they had been using for their previous lens designs. Next, they had to determine how to square the edge of the PMMA intraocular lens. This is an interesting criterion for design, but also a complex criterion for manufacturing. Typically, when manufactu!ring, it is harder to create perfectly square edge than to create a rounded edge. Aurolab’s design team had to figure all of this out.

Aurolab had three reasons for using PMMA. The first reason was cost: they could keep the same supply-chain, and also sell the advanced IOL at a low price. The second reason was the challenge of creating something for societal benefit. The third reason was to serve as a technology demonstrator; while square-edge lenses had previously been created, Aurolab was the first to make a square-edge lens from PMMA.

The result was an innovative lens that no other Indian company made in 2004. Truedge lenses help patients receive affordable, compassionate care: not once but twice!

சில கண்புரை நோயாளிகள், ஒரு முறை கண்புரை அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஒரு புது பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு லென்ஸ் உறையின் பின்பகுதியில் ஏற்படும் படலம் (Posterior Capsular Opacification) அல்லது இரண்டாம் நிலை கண்புரை என்று பெயர். அரவிந்த் பொறியாளர்கள் இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒரு புதிய லென்ஸை உருவாக்கியுள்ளனர். ஆரோலேபால் Truedge லென்ஸ் முதன் முறையாக  2004-ல் உற்பத்தி செய்யப்பட்டது.

Truedge லென்ஸ் என்பது உள்விழி லென்ஸின் ஒரு வகை. உள்விழி லென்ஸ்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்பு நோயாளிக்கு தெளிவான கண் பார்வையை வழங்கக்கூடியது. Truedge லென்ஸ் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தீர்க்கக் கூடிய தனித்தன்மை வாய்ந்தது. இரண்டாம் நிலை கண்புரையானது, லென்ஸ் உறையின் பின்பகுதியில் உருவாகக்கூடிய செல்களின் அசைவுகளாலும் வளர்ச்சியாலும் ஏற்படக்கூடியது. கண்புரை அறுவை சிகிச்சையின் போது பொருத்தப்படும் உள்விழி லென்ஸ் இத்தளத்தில் அமையுமாறு பொருத்தப்பட்டிருக்கும். அல்கான் (Alcon) என்ற பன்னாட்டு நிறுவனம், மடக்கக் கூடிய சதுர முனைகள் கொண்ட லென்ஸ்களை தனித்தன்மை வாய்ந்த ஒட்டக்கூடிய தன்மையுடைய பொருளில் செய்தது. இந்தப் பொருளில் உள்விழி லென்ஸ் தயாரிக்கும் போது இது லென்ஸ் உறையின் பின்பகுதியுடன் நெருக்கமாக ஒட்டிக் கொள்ளும். எனவே, செல்களின் அசைவிற்கும், வளர்ச்சிக்கும் இடமிருக்காது.

இப்புதிய வடிவிலான லென்ஸை ஆரோலேபின் டிசைனிங் குழு, தனது முந்தைய லென்ஸ்களை தயாரிக்கப் பயன்படுத்திய அக்ரிலிக் மெட்டீரியல் (பாலி மெத்தில் மெத்தா அக்ரிலேட்) தயாரிக்கத் திட்டமிட்டது. பின்னர் அக்ரிலிக் உள்விழி லென்ஸ்களை சதுர வடிவில் எப்படி செய்வது என்பதையும் தீர்மானித்தது. இந்த புதிய டிசைன் பார்ப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும், தயாரிப்பதற்கு சற்று கடினமானதாக இருந்தது. லென்ஸ்களை உற்பத்தி செய்யும் போது துல்லியமான சதுர முனைகளை உருவாக்குவது எளிதானதாக இருக்கவில்லை. எனினும் ஆரோலேப் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தது.

ஆரோலேப் அக்ரிலிக் மெட்டீரியலை பயன்படுத்தி லென்ஸ் தயாரித்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதல் காரணம் விலை; குறைவான விலையில் அதிநவீன உள்விழி லென்ஸ்களை விநியோகிப்பதற்கும், இரண்டாவதாக சமூகத்திற்கு பயன்படும் வகையில், சவாலுடன் புதிதாக ஏதேனும் ஒன்றை உருவாக்குவதற்கும், மூன்றாவதாக புதிய தொழில்நுட்பங்களை முதலில் பயன்படுத்துபவராக இருப்பதற்காகவும் ஆரோலேப் முனைப்புடன் செயல்பட்டது. சதுர வடிவிலான லென்ஸ் ஏற்கனவே உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், PMMA மெட்டீரியலில் சதுர வடிவ லென்ஸை முதலில் உருவாக்கியது ஆரோலேப்,.

இறுதியில் 2004-ம் ஆண்டு, சதுர வடிவிலான புதிய லென்ஸை முதல் இந்தியக் கம்பெனியாக ஆரோலேப் உருவாக்கியது. இந்த Truedge லென்ஸ் நோயாளிகளுக்கு அவர்கள் ஏற்றும் கொள்ளக்கூடிய விலையில், அர்ப்பணிப்புடன் கூடிய பாதுகாப்பை வழங்குகிறது.

Idea & Design : Aurolab Team
Compiled by : Logan D. A. Williams, Volunteer.
12.06.2017