This camera was used in Operation Theatre for video recording and displaying live surgery videos in OT television. The camera runs with Linux OS and programmed to see live surgery videos from anywhere (Manually developed program by AEH Pondy Team), it also has in build wifi & Bluetooth which allows connecting with nearby devices and to access internet. The most interesting part of this camera is cost, it cost around 8 to 10 thousand rupees but the existing camera in OT costs more than 3 Lakhs, video clarity of this camera is comparable with the existing OT camera. This innovation was taken forward by aurolab team.

அறுவை சிகிச்சை அரங்கில், அறுவை சிகிச்சை செய்வதை நேரடியாக அறுவை சிகிச்சை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இந்த கேமரா உதவும். இந்த கேமரா லினக்ஸ் OS-ல், எங்கிருந்து வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை நேரலையை காணும் வண்ணம் (இது அரவிந்த் பாண்டிச்சேரி குழுவினரால் உருவாக்கப்பட்டது) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் வை-ஃபை மற்றும் ப்ளூடூத் உதவியுடன் அருகில் இருக்கும் கருவிகளை (செல்போன், லேப்டாப் போன்றவை) இணையதளத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். இக்கேமராவில் இருக்கும் ஆச்சர்யமான விஷயம் இதன் விலை தான். இக்கேமராவின் விலை எட்டு முதல் பத்தாயிரம் ரூபாய் வரை தான் இருக்கும். ஆனால் தற்போது அறுவை சிகிச்சை அறையில் இருக்கும் கேமராவின் விலை மூன்று லட்சம் ரூபாய். வீடியோவின் தரமும் தற்போதுள்ள இருக்கும் கேமராவுடன் ஒப்பிடும் பொழுது தரமானதாக உள்ளது. இக் கண்டுபிடிப்பு ஆரோலேப் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

Idea Generators – Dr.Venkadesh, VIT student, Dr.John, Mr.Sulaiman, AEH Pondy & Mr.Suthan Aurolab
09.10.2017